விவசாயிகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்த அரசு முயற்சி….. போராட்டக்காரர்கள் ஆவேசம் பேட்டி…

விவசாயிகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்த அரசு முயற்சி….. போராட்டக்காரர்கள் ஆவேசம் பேட்டி…
Spread the love

டெல்லியில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பல்வேறு மாநில விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அந்த சட்டத்தை ரத்த செய்ய முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்ட மசோதாவை ரத்து செய்ய கோரி, பல்வேறு மாநில விவசாயிகள் இன்று 14வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மத்திய அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அழைத்தது. அப்போது 20 பக்கம் கொண்ட உறுதி மொழி அளித்தது. அதில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்கலாம். பண்ணை விற்பனையை செயல்படுத்தலாம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம் என கூறியுள்ளது. அதே நேரத்தில், வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வாய்ப்பே இல்லை என கூறியுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் கடிதம் குறித்து விவசாயிகள் கூறுகையில், இங்கு போராட்டம் நடத்துவதற்காக பல குழுவினர் உள்ளனர். அதில், 17 பேருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. எங்களை பேச்சு வார்த்தைக்கு வரவழைத்து, பின்னர் விவசாயிகளை வரும் வழியிலேயே தடுத்து நிறுத்தி காலத்தை வீணடிக்கின்றனர். இதை வேண்டுமென்றே செய்கின்றனர். பேச்சு வார்த்தை என கூறி அலைக்கழிக்கின்றனர்.

நேற்று எங்களது கோரிக்கையை ஏற்க முடியாது என கூறிவிட்டு, இன்று 20 பக்கம் கொண்ட கடிதம் அனுப்பியுள்ளனர். அதை படித்து பார்த்த பிறகு முடிவு செய்வோம். அந்த கடிதத்தில் கூறியுள்ளதை எங்களால் ஏற்க முடியாது. இந்த முடிவை எங்களது போராட்டத்தின் ஆரம்பத்திலேயே கொடுத்து இருந்தால், எங்களுக்கு நேரம் வீணாகி இருக்காது. எங்களை ஒரு அகதியை போலவும், குற்றவாளிகளை போலவும் போலீசாரை வைத்து சிறைபிடித்து வைத்து இருக்கிறார்கள். அதை பற்றி நாங்கள் கவலைபடவில்லை என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *