யோகா நிறுவனங்களை கண்காணிக்க மத்திய அரசு முடிவு..!

யோகா நிறுவனங்களை கண்காணிக்க மத்திய அரசு முடிவு..!
Spread the love

உலகம் முழுவதும் மக்கள் மனதில் யோகாவை கொண்டுச்செல்லும் பணியில் மத்திய அரசு அதி தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் யோகா பயிற்சி முறையை மக்களுக்கு ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகமும், இந்திய கலாச்சார தொடர்பு அமைப்பும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நேரத்தில், ஐசிசிஆர் அமைப்பின் தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே, ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா ஆகியோர் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், உலக நாடுகளில் யோகா பயிற்சி ஊக்குவிக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

யோகா பயிற்சிகளுக்கான தேவை மக்களுக்கு உலகளவில் அதிகரித்திருப்பதாகவும், எனவே யோகா சான்றிதழ்களை வாரியத்தின் சான்றிதழ்களை மையமாகக் கொண்டு உலக அளவில் நம்பகத்தன்மையான யோகா பயிற்சி முறையை ஊக்குவிக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

ஆனால், பண நோக்கத்துடன் பல பயிற்சி நிறுவனங்கள், தரமில்லாத பயிற்சியை அளிப்பதாக அந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கூறினர்.

எனவே, இதனை முற்றிலும்மாக தடுக்கும் வகையில் யோகா சான்றிதழ் வாரியம், தரமான மற்றும் பாரம்பரிய இந்திய யோகா பயிற்சி முறையை பல்வேறு நிறுவனங்களுடனும், சான்றிதழ் பெற்ற யோகா வல்லுனர்களுடனும் இணைந்து வழங்கப்படும் எனவும் அக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

-ஆர்.லெக்‌ஷ்மணன் குணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *