மு.க ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் திடீர் ஆலோசனை!

மு.க ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் திடீர் ஆலோசனை!
Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைபற்றியது. ௧௫௯ தொகுதிகளில் வெற்றி வாகையை சூடியதால், தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் வரும் ௭ம் தேதி பதவியேற்க உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். புதிய அரசு பதவி ஏற்பு மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தலைமை செயலாளரும் சுகாதாரத்துறை செயலாளரும் எடப்பாடி பழனிசாமியுடனே ஆலோசனை மேற்கொண்டிருகிறார்கள். தேர்தலில் பெரும்பான்மையை பெற முடியாத எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, மு.க.ஸ்டாலின் முதன் முறையாக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *