மு.க.ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்த பெண் – பரமக்குடியில் பரபரப்பு

மு.க.ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்த பெண் – பரமக்குடியில் பரபரப்பு
Spread the love

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்பற்காக, இளம்பெண் தனது நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
2021 சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், திமுக முன்னிலை பெற்று வெற்றியடைந்தது. இதையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
பரமக்குடி தாலுகா பொதுவக்குடியை சேர்ந்த திமுக உறுப்பினர் கார்த்திக் என்பவரது மனைவி வனிதா. திமுக விசுவாசியான இவர், திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றால், தனது நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்துவதாக அதே பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் வேண்டி கொண்டார்.
இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து திமுக வெற்றி பெற்றது. தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார் என கூறப்பட்டது. இதையறிந்ததும் வனிதா, இன்று காலை முத்தாலம்மன் கோயிலுககு சென்று தரிசனம் செய்தார். பின்னர் அவர், வேண்டுதலின் நேர்த்தி கடனாக, தனது நாக்கை அறுத்து கொண்டார்.
இதை பார்த்ததும், அங்கிருந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரை மீட்டு, பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *