மம்தா பானர்ஜி வங்காள பெண் சிங்கம்!!

மம்தா பானர்ஜி வங்காள பெண் சிங்கம்!!
Spread the love

மம்தா பானர்ஜிக்கு ஒரு முறை விமான பயணத்தை முடித்துக்கொண்டு சொந்த மாநிலமான மேற்குவங்கத்தில் விமானம் தரை இறங்க அனுமதி கேட்ட போது கட்டுப்பாட்டு அறையிருந்து அனுமதி கிடைக்காமல், ஒரு மணி நேரம் வானில் வட்டமடித்தக்கொண்டே இருந்திருக்கிறார் மம்தா.

மேலும், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அனுமதி மறுக்கபட்டது மட்டுமன்றி அடுத்த சில நிமிடங்களில் எரிபொருள் தீரும் தருவாய்குச் சென்றுள்ளது. அப்படி தீர்ந்தால் விமானம் விழுந்து நொறுங்கிவிடும் என விமானத்திலிருந்த மம்தாவிற்கு தகவல் வந்துகொண்டே இருந்திருக்கிறது.
இருப்பினும், கடைசிவரை மம்தா பிடிவாதத்தை விட்டுக்கொடுக்காமல் அமைதியாக இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

பின்னர், கடைசி பத்து நிமிடத்திலேயே அனுமதி கிடைத்து
விமானம் தரை இறக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகே மத்திய அரசின் நிர்பந்தத்தால் தான் இப்படி நடந்தது என்பது தெரியவந்தது.

அதற்கான பாராளுமன்றத்தில் ஒருசில சட்டத்திருந்தங்கள் கொண்டுவர இருப்பதால், அதற்கு திரிணாமூலின் ஒப்புதலும் தேவை. ஆனால் மம்தா ஒப்புக்கொள்ள மாட்டார்.அதற்காகவே இந்த விமான நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு மம்தா பானர்ஜியை உளவியல் ரீதியாக துண்புறுத்தி இருகின்றனர். அதன் பிறகு இந்த தேர்தல் பிராச்சாரத்தின் போது வாகன விபத்தும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கடைசியாக தேர்தல் ஆணையத்தை கையில்வைத்துக்கொண்டு 8 கட்ட தேர்தல் என்னும் நெருக்கடியையும் கொடுத்துவிட்டது.

மேலும் மம்தா உடனிருந்தவர்கள் ஒவ்வொருவராக முதுகில் குத்தி வெளியேறிய நிலையும் அங்கு அரங்கேறியுள்ளது. பொருளாதார மற்றும் அதிகாரத்தின் அசுர பலத்தை எதிர்கொண்டு ஒற்றை மனிதராக வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி அவர்கள் , இழந்தது ஆயிரம் இருக்கலாம் இறுதி வரை இழக்காமல் இருந்தது மனத்துணிவையும் தன்னம்பிக்கையையும் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *