அமைச்சர் ஆகிறார் உதயநிதி

அமைச்சர் ஆகிறார் உதயநிதி
Spread the love

சென்னை: தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிக்கும் கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதனைத்தொடர்ந்து சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி முடிவுக்கு வந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது. தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

இதனிடையே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அனைத்து மக்களிடமும் நேரடியாக தொடர்பு கொள்ளும் துறை, உள்ளாட்சி துறை, அதனால் அந்த துறை அமைச்சராக உதையநிதி வர வாய்ப்பு.
முன்பு கருணாநிதி ஸ்டாலினை உள்ளாட்சி துறைக்கு நியமித்தது கவனிக்க வேண்டிய விஷயம்.

அதே போல் தமிழ் நாட்டில் பெண் முதல்வர்களை கண்ட சட்டமன்றம் முதல் முறையாக பெண் சபாநாயகரை காணும் வாய்ப்பும் (சுப்புலக்ஷிமி ஜெகதீசன் ) வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவிடம் ஒரு சதவீதத்தில் ஆட்சியை இழந்த திமுக தற்போது சுமார் 20 சதம் வாக்கு கூடுதலாக பெற்று சுமார் 510க்கு மேற்பட்ட தொகுதிகளில் கூட்டணியோடு வெற்றி பெற்று, தனி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க உள்ளது.
இந்த இடத்தில் ஸ்டாலின் சொல்லை முதலில் பதிவிடுகிறோம். கொள்ளைப்புறமாக ஆட்சியை பிடிக்க எனக்கு விருப்பம் இல்லை* என கூறியது நினைவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *