கூலி தகராறில் தொழிலாளி கொலை – சக தொழிலாளி கைது

கூலி தகராறில் தொழிலாளி கொலை – சக தொழிலாளி கைது
Spread the love

சென்னை , சென்ட்ரலில், தொழிலாளி கொலை அரக்கோணத்தில் பதுங்கியிருந்தவர் கைது.
கூலி தகராறில், கொன்றதாக வாக்குமூலம்.

சென்னை, சென்ட்ரலில், சுமை தூக்கும் தொழிலாளி மீது கல்லைப்போட்டு கொலை செய்த நபரை, அரக்கோணத்தில் வைத்து கைது செய்தனர். கூலி தகராறில், கொன்றதாக , கைதானவர் வாக்கு மூலம் கொடுத்தார்.

சென்னை, சென்ட்ரலில், 14 வது நடை மேடையில், கடந்த 1ம்தேதி அன்று, சுமை தூக்கும் தொழிலாளி பூங்காவனம்(42) என்பவர், இரவில் தூங்கிக்கொண்டிருந்தார்.அப்போது, சக தொழிலாளியாக அழுக்குமார் என்பவர் அங்கு வந்து, பூங்காவனம் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார், பின்னர், அவர் தப்பி விட்டார். இன்ஸ்பெக்டர் சசிகலா இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார். அரக்கோணத்தில், பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான போலீசார் , அங்கு விரைந்து சென்று, அழுக்குமாரை கைது செய்தனர், விசாரணையில், கூலி தகராறில்,போதையில், பூங்காவனத்தை கொன்றதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *