காவல் நிலையத்தில் கொக்கு தஞ்சம்

காவல் நிலையத்தில் கொக்கு தஞ்சம்
Spread the love

சாத்தாங்காடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த பெரிய வகை கொக்கு.

சென்னை: சாத்தாங்காடு காவல் நிலையத்தில்,பெரிய வகை கொக்கு ஒன்று, தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  சென்னை,மணலி, சாத்தாங்காடு காவல் நிலையத்தில்,  பெரிய வகையை சேர்ந்த கொக்கு ஒன்று, பறக்க முடியாமல் தவித்தபடி நின்றன. இதை பார்த்த போலீசார், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். பின்னர், உடனடியாக , வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு, வனத்துறை அலுவலர் வினோத் என்பவர்  வந்து, அந்த கொக்கை பிடித்தார். அதன் இறகில் காயம் இருந்ததால், பறக்க முடியாமல், இங்கு தஞ்சம் அடைந்தது தெரியவந்தது. பின்னர், அதற்கு முதலுதவி அளித்து, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. சாத்தாங்காடு பகுதியில், கால்வாய்களில், நிறைய கொக்குகள் உள்ளன. அதில் ஒன்று அடிப்பட்டு பறக்க முடியாமல் இங்கு வந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *