6 முறை தோல்வி… 75 வயதில் 7வது முறையில் வெற்றி – தளராமல் போராடிய எம்.ஆர். காந்தி

6 முறை தோல்வி… 75 வயதில் 7வது முறையில் வெற்றி – தளராமல் போராடிய எம்.ஆர். காந்தி
Spread the love

கன்னியாகுமரி : தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பல தோல்விகளுக்கு பிறகே, பாஜக வேட்பாளர் எம்ஆர் காந்திக்கு வெற்றி கைகூடியது அக்கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் பாஜக கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.ஆர்.காந்தி வெற்றி பெற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு 6 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். கடந்த 1980, 89 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் நாகர்கோவில் தொகுதியிலும், 1984 மற்றும் 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் குளச்சல் தொகுதியிலும், 2011-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் அவர் தோல்வியடைந்த நிலையில், 2016 தேர்தலில் அவர் இரண்டாம் இடத்தைப் பிடித்து இருந்த நாகர்கோவில் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதிலும் கடந்த தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜனை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

சட்டசபை தேர்தல்களில் 6 முறை போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், 7வது முறையாக தேர்தலை சந்தித்து தனது 75 வயதில் எம்.ஆர்.காந்தி வெற்றி பெற்றுள்ளார். குமரி மாவட்டத்தில் பா.ஜ.க-வின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே உறுதி துணையாக இருந்தவர் எம்.ஆர்.காந்தி. எனவே இவரின் வெற்றி பாஜக தொண்டர்கள் இடையே கடும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *