5ம் தேதி 3வது முறையாக பதவியேற்கிறார் மம்தா

5ம் தேதி 3வது முறையாக பதவியேற்கிறார் மம்தா
Spread the love

மேற்கு வங்கம் : மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி, மே 5ம் தேதி 3வது முறையாக முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், 213 இடங்களில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 3வது முறையாக ஆட்சியமைக்கிறது. இதனிடையே, இன்று மாலை 7 மணிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார். இது தொடர்பான தகவலை ஆளுநர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்படுவதை தொடர்ந்து, மம்தா பானர்ஜி 3வது முறையாக வரும் மே 5ம் தேதி முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். முன்னதாக கொல்கத்தாவில் உள்ள கட்சி தலைமையகத்தில் தனது கட்சித் தலைவர்களுடன் மம்தா பானர்ஜி ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். மறு வாக்கு எண்ணிக்கை கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்த நிலையில் நீதிமன்றம் செல்ல இருப்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *