மகாராஷ்டிராவில் ஆலங்கட்டி மழை – நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

மகாராஷ்டிராவில் ஆலங்கட்டி மழை – நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
Spread the love

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் பலத்த மழை மற்றும் ஆலங்கட்டி மழையால் 150’க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஒரு அதிகாரி இன்று தெரிவித்தார்.
தானே மாவட்டத்தின் முர்பாத் தாலுகாவில் நேற்று பல கிராமங்களில் பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த மழையைத் தொடர்ந்து ஏராளமான மின் கம்பங்களும் இடிந்து விழுந்தன.

“முழுமையாக சேதமடைந்த ஐந்து-ஆறு வீடுகள் உட்பட 150’க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. பலத்த மழை காரணமாக பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன.” என்று முர்பாத் தாசில்தார் அமோல் கதம் கூறினார்.

எந்தவொரு விபத்து ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை என அவர் மேலும் கூறினார். அதிகாரிகள் இழப்புகளை மதிப்பீடு செய்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அலியாச்சிவாடி, மெர்டி, மொகல்வாடி, கெலேவாடி, வால்ஹிவாரே, தர்கீர்ட் மற்றும் பந்தேஷேத் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட கிராமங்களில் பெரும்பாலானவை மல்ஷேஜ் மலைத் தொடர் அருகே அமைந்துள்ளன.

கொரோனா இரண்டாவது அலையின் கோரத் தாண்டவம் மகாராஷ்டிராவில் வாட்டி வரும் நிலையில், தற்போது கனமழையால் வீடுகள் சேதமடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *