தமிழகத்தில் மே 6ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் மே 6ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்!
Spread the love

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்திற்கு கூடுதலாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் மே. 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  • அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி
  • மே 20ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே அனுமதி.
  • மே 6ம் தேதி முதல் மளிகை மற்றும் பலசரக்கு கடைகள் மதியம் 12 வரை மட்டுமே அனுமதி
  • இறைச்சி கடைகள் சனி, ஞாயிறு விடுமுறை. மற்ற நாட்களில் காலை 6- நண்பகல் 12 மணி மட்டுமே செயல்பட அனுமதி
  • திருமண விழாவில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி
  • ரயில், மெட்ரொ, தனியார் பேருந்து, அரசு பேருந்துகளில் 50% மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதி
  • மதியம் 12 மணி வரை மட்டுமே தேநீர் கடைகள் இயங்க அனுமதி
  • ஐடி நிறுவனங்களில் இரவுநேரப் பணி மேற்கொள்ள அனுமதி
  • பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி
  • ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் இரவுநேர ஊரடங்கு வழக்கம்போல் தொடர்ந்து அமலில் இருக்கும்
  • சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், இதர விழாக்களுக்கு தடை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *