தங்கம் பவுன் ரூ.35,376க்கு விற்பனை!

தங்கம் பவுன் ரூ.35,376க்கு விற்பனை!
Spread the love

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.96 உயா்ந்து, ரூ.35,376-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-இல் ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, ஏப்ரல் 6 முதல் மீண்டும் தங்கம் விலை உயா்ந்தது. குறிப்பாக, ஏப்ரல் 9-இல்ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 21-இல் ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை குறைந்து வந்தது.

இந்த நிலையில், சென்னையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.96 உயா்ந்து, ரூ.35,376-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *