துாக்க மாத்திரை தின்று இளம் பெண் தற்கொலை!

துாக்க மாத்திரை தின்று இளம் பெண் தற்கொலை!
Spread the love

சிறுநீரக கோளாரால் அவதிப்பட்டு வந்த இளம் பெண் துாக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

செஞ்சி அடுத்த மாதப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் திவ்யா 24; 10ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனம் உடைந்த அவர், கடந்த 1ம் தேதி மதியம் வீட்டில் இருந்த துாக்க மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டார்.இதில் மயக்கம் அடைந்த திவ்யாவை, அவரது குடும்பத்தார் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று அதிகாலை இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *