இந்தியா முழுவதும் 75 லட்சம் பேர் வேலையிழப்பு.. அதிர்ச்சி செய்தி

இந்தியா முழுவதும் 75 லட்சம் பேர் வேலையிழப்பு.. அதிர்ச்சி செய்தி
Spread the love

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகளால் 75 லட்சம் பேர் வேலை இழந்து சிஎம்ஐஇ எனப்படும் இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவை பலரை வேலை இழக்க செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *