திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திடீர் தீ விபத்து – அதிகாலையில் பரபரப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திடீர் தீ விபத்து – அதிகாலையில் பரபரப்பு!
Spread the love

திருப்பதி தேவஸ்தனம் அஸ்தான மண்டபத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாயின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன், ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளன. சில கோயில்களில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துககு அனுமதிக்கப்படுகின்றனர். இதைதொடர்ந்து திருப்பதி தேவஸ்தானமும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கொரோனா பரவலால், திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பரும் அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் அங்குள்ள கடைகள் மூடப்பட்டுள்ளன. அதிலும் ஏழுமலையான் கோயிலில் அமைந்துள்ள அஸ்தான மண்டபத்தில் உள்ள கடைகள் சில தளர்வுகளுடன் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ஏழுமலையான் கோயில் அஸ்தான மண்டபத்தில் உள்ள ஒரு கடையில் திடீரென கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்ததும், அக்கம்பக்கத்தினர், கோயில் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை.
தகவலறிந்து தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்த பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாயின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *