அம்மா உணவகத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு – வாலிபருக்கு தர்மஅடி

அம்மா உணவகத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு – வாலிபருக்கு தர்மஅடி
Spread the love

சென்னை வளசரவாக்கத்தில் அம்மா உணவகம் செயல்படுகிறது. அங்கு அதே பகுதியை சேர்ந்த செல்வி உள்பட பெண்ககள் சிலர் வேலை செய்கின்றனர்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் அனைவரும் வேலைக்கு வந்தனர். உணவு பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.
இதையொட்டி, ஒரு வாலிபர் அம்மா உணவகம் சென்றார். அப்போது, வாடிக்கையாளர்கள் சாப்பபிட்டு வைத்த தட்டுகளை அகற்றம் பணியில் செல்வி ஈடுபட்டார். இதை பார்த்த வாலிபர், செல்வி கழுத்தில் இருந்த செயினை பறித்து கொண்டு தப்பியோட முயன்றார். இதை பார்த்ததும், அங்கிருந்த பொதுமக்கள், அநத வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
தகவலறிந்து வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வாலிபரை பிடித்து, காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சென்னை கேகே நகரை சேர்ந்த ஜெயகுமார் என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *