திருச்சி இன்ஸ்பெக்டருக்கு கொரோனா!

திருச்சி இன்ஸ்பெக்டருக்கு கொரோனா!
Spread the love

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனுக்கு கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தன. பின்னர் அவர், டாக்டர்களிடம் பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்ஸ்பெக்டருக்கு கொரோனா காரணமாக மண்ணச்சநல்லூர் போலீஸ் ஸ்டேசனில் பேரூராட்சியின் செயல் அலுவலர் கமலக்கண்ணன் உத்தரவின்படி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தும், அந்த பகுதி முழுவதும் பிளீச்சிங் பவுடரும் தூவினர்.

இந்தநிலையில் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ் – பெக்டர் முத்து மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ சேகர் உள்ளிட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக போலீஸ் நிலையம் முன்பு கயிறுகட்டி தடுப்புவேலி 5 அமைத்துள்ளனர். புகார் கொடுக்கவரும் பொதுமக்களிடம் புகாரின் தன்மைக்கேற்ப விசாரணை செய்து உடனடி நடவடிக்கை எடுத்துவரும் போலீசார், தேவையின்றி கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடு களை கடைபிடித்து விழிப்புடன் செயல்படுமாறும் போலீசார் 5 அறிவுறுத்தி வருகின்றனர். இதேபோல் சிறுகனூர் போலீஸ் நிலையத்திலும் கயிறு மூலம் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *