சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்!!

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி  காலமானார்!!
Spread the love

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. சற்றுமுன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலமானார்.

தமிழக அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக பல்வேறு பொதுநல வழக்கு தொடர்ந்து அதிரவைத்தவர் ர் டிராபிக் ராமசாமி (87). ஆரம்பக் காலத்தில் ராமசாமி சென்னை, பாரிமுனையின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் போலீஸாருக்கு உதவி செய்தார். அதன்பிறகு டிராபிக் ராமசாமி என்று அழைக்கப்பட்டார்.


டிராபிக் ராமசாமி கடந்த 20 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களைப் பொது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டம் வருவதற்கு முன்பு இருந்தே பல்வேறு தகவல்கள் மக்களை போய் சேர வேண்டும் என்று போராடி வந்தார் டிராபிக் ராமசாமி.

இன்ஜின் பொருத்தப்பட்ட மீன்பாடி வண்டிகள் சென்னையில் காணாமல் போன இவர் தொடர்ந்த வழக்கு காரணம் ஆகும்.. பிளக்ஸ் பேனர் கலாச்சாரத்துக்கு எதிரான இவர் தொடர்ந்த வழக்கு காரணமாகே தமிழகம் முழுவதும் கட்-அவுட் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சென்னையில் வரம்பு மீறிக் கட்டப்படும் கட்டிடங்கள், வாகன பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக இவர் தொடர்ந்த பொதுநல வழக்கு காரணமாக உயர் நீதிமன்றம் பல அதிரடியா தீர்ப்புகளை வழங்கியது. இதனிடையே கல்லூரி படிப்பையே தொடத இவர் இவர் தான் தொடர்ந்த பல்வேறு வழக்குகளில் முன்னின்று வாதாடி உள்ளார். இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வெளியானது.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சற்றுமுன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *