டீ வியாபாரியிடம் வழிப்பறி – பைக் ஆசாமிக்கு வலை

டீ வியாபாரியிடம் வழிப்பறி – பைக் ஆசாமிக்கு வலை
Spread the love

  சென்னை,வியாசர்பாடி பகுதியில்,அதிகாலை நேரத்தில், சைக்கிளில் சென்ற டீ மாஸ்டரிடம், செல்போன் பறித்த மர்ம நபர்களை ,தேடி வருகின்றனர்.

  சென்னை, வியாசர்பாடி, பக்தவச்சலம் காலனி,27 வது தெருவில் வசிப்பவர் துரை சாமி மகன், பெரியசாமி(53),இவர், சர்மா நகரில், தே நீர் கடை ஒன்றில், டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று,ஓட்டேரியில் உள்ள நண்பரை பார்க்க , பெரியசாமி சென்றார், பின்னர்,இன்று அதிகாலையில், சைக்கிளில்,தன் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார். கணேசபுரம், மாநகராட்சி மருத்துவமனை எதிரே வந்துக்கொண்டிருந்தார்.அப்போது,பின்னால் பைக்கில்வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், பெரியசாமியின் மேல் சட்டைப்பையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர், இது தொடர்பான புகாரின் பேரில், வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *