மளிகை கடையை உடைத்து கொள்ளை

மளிகை கடையை உடைத்து கொள்ளை
Spread the love

சென்னை,கொடுங்கையூர் பகுதியில்,அதிகாலை நேரத்தில்,  மளிகை  கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த நபர்கள், பைக்கை விட்டு தப்பொயோடினர்.

  சென்னை,கொடுங்கையூர், விவேகானந்தா நகர், 2வது தெருவை சேர்ந்தவர்  தோமைய்யா அந்தோணி மகன் பீட்டர்(63), இவர்,முதல் மாடியில் வசித்து வருகிறார். தரைத்தளத்தில்,மளிகை கடை நடத்தி வருகிறார்,  நேற்று வழக்கம் போல், இரவு வியாபாரம் முடிந்து, கடையை பூட்டி விட்டு ,வீட்டுக்கு சென்றார், அதிகாலையில்,சத்தம் கேட்டு கீழே பீட்டர் வந்தார்.அப்போது, மளிகை கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது, கடைக்குள் இருந்து ,இரண்டு மர்ம நபர்கள் ஓட்டம் பிடித்தனர், உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த, ரூ,20 ஆயிரம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது, மேலும், கொள்ளையர்கள் வந்த பல்சர் பைக்கை விட்டு தப்பிவிட்டனர், இது தொடர்பாக, பைக்கை கைப்பற்றி, கொடுங்கையூர் போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *