அம்மா உணவகத்தை சூறையாடிய 2 பேர் திமுகவில் இருந்து நீக்கம்!

அம்மா உணவகத்தை சூறையாடிய 2 பேர் திமுகவில் இருந்து நீக்கம்!
Spread the love

சென்னை முகப்பேர் 10-வது பிளாக்கில் உள்ள அம்மா உணவகத்திற்குள் இன்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த அம்மா உணவக பெயர் பலகைகள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் உள்ளிட்டவற்றை கிழித்து வீதியில் எறிந்தனர். அத்துடன் உணவகத்தில் இருந்து உணவுப் பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனைக்கண்டு, அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பெண் ஊழியர்கள் வெளியே ஓடி வந்தனர்.தகவல் அறிந்து ஜெஜெ நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை கண்டிக்கும் விதமாக அம்மா உணவகத்தின் பெயர் பலகையை எடுத்தவர்கள் மீது மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனை, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ “மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் உணவகத்தின் பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் பொருத்தவும், 2 பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *