தரமான சிகிச்சை – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

தரமான சிகிச்சை – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
Spread the love

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் இருக்கிறதா என்பதையும், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

மேலும், தலைமைச் செயலாளர், டிஜிபி, சுகாதாரத்துறைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், கொரோனோ நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்தவும் அறிவுறுத்தினார்.

அனைத்து மாவட்டங்களில் கொரோனாவுக்கான சிகிச்சை முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *