அம்மா உணவக பெயர் பலகை நீக்கப்பட்ட விவகாரம்: இருவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை.. சுப்பிரமணியன் பேட்டி

அம்மா உணவக பெயர் பலகை நீக்கப்பட்ட விவகாரம்: இருவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை.. சுப்பிரமணியன் பேட்டி
Spread the love

சென்னை: அம்மா உணவக பெயர் பலகை நீக்கப்பட்ட சம்பவத்தில் திமுக தொண்டர்கள் இருவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த பெயர் பலகைகளை திமுகவை சேர்ந்த இருவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்து மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார் என திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அம்மா உணவக பெயர் பலகையை அகற்றிய இருவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட இருவரும் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. இருவர் மீதும் காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளோம் எனவும் கூறினார்.

One thought on “அம்மா உணவக பெயர் பலகை நீக்கப்பட்ட விவகாரம்: இருவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை.. சுப்பிரமணியன் பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *