மரத்தில் கார் மோதி புது மாப்பிள்ளை பலி – தென்காசியில் சோகம்

மரத்தில் கார் மோதி புது மாப்பிள்ளை பலி – தென்காசியில் சோகம்
Spread the love

தென்காசியில்,தறிக்கெட்டு ஓடிய கார், மரத்தில் மோதியதில், புது மாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம்,திருவேங்கடம், வெள்ளாங்குளம், இந்திரா காலனியை சேர்ந்தவர் சின்ன பொய்யா மொழி, இவரின் மகன் மகேஷ் குமார்(26),இவர்,மின் வாரியத்தில்,ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு,  கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், திருமணம் நடந்தது,  இந்த நிலையில் , நேற்று இரவு,நண்பர்கள்  மணிகண்டன், கனகராஜ்  ஆகியோருடன், மகேஷ் குமாருடன், காரில் , திருவேங்கடத்திற்கு சென்றார். காரை கனகராஜ் ஓட்டினார்.அப்போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தறிக்கெட்டு ஓடியது, பின்னர், கார் புளியமரத்தில் மோதியது, இதில், மகேஷ் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்,நண்பர்கள் இருவரும் காயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *