உயிருக்கு போராடிய கொரோனா நோயாளி – உதவிக்கரம் நீட்டிய சோனுசூட்

உயிருக்கு போராடிய கொரோனா நோயாளி – உதவிக்கரம் நீட்டிய சோனுசூட்
Spread the loveஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனா பாதித்த பெண் ஒருவரை காப்பாற்ற விமான ஆம்புலன்ஸ் சேவையை அனுப்பியுள்ளார் நடிகர் சோனுசூட்.

சினிமாக்களில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்வில் மக்களிடையே நாயகனாக வலம் வருபவர் நடிகர் சோனுசூட். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் முழு ஊரடங்கு அமலானபோது புலம்பெயர் தொழிலாளிகளுக்கு உதவியது முதல் இன்று வரை பல்வேறு மக்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து வருவதுடன், பேரிடரில் பாதித்த குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்றுள்ளார்.


இந்நிலையில் தற்போது இரண்டாம் அலை கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா பாதித்த பெண் ஒருவரை அவசரமாக உத்தரபிரதேசத்தில் இருந்து ஐதராபாத் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதுகுறித்து அறிந்த சோனுசூட் உடனடியாக விமான ஆம்புலன்ஸ் சேவையை ஏற்பாடு செய்து அந்த பெண்ணுக்கு உதவியுள்ளார்.

One thought on “உயிருக்கு போராடிய கொரோனா நோயாளி – உதவிக்கரம் நீட்டிய சோனுசூட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *