ஆளுநரிடம் ஆட்சி அமைக்க நாளை மாலை உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின்

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க  நாளை மாலை உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின்
Spread the love

சென்னை: தமிழகத்தில் ஆட்சியமைக்க நாளை மாலை 6.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மு.க.ஸ்டாலின் உரிமை கோருகிறார். 7ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். பதவி ஏற்பு விழாவில் ஒவ்வொரு அமைச்சருக்கும் 8 முதல் 10 பாஸ் மட்டுமே வழங்கப்பட்டு மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி பல இடங்களில் வென்று ஆட்சியை அமைக்க உள்ளது. திமுக தனிபெருன்பான்மையுடன் 124 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *