இன்னும் சற்று நேரத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் – சென்னை அண்ணா அறிவாலயத்தில்

இன்னும் சற்று நேரத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் – சென்னை அண்ணா அறிவாலயத்தில்
Spread the love

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திமுகவின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியது. இதில் திமுக மட்டும் 133 தொகுதிகளில் வென்றது. இதனையடுத்து திமுக தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியமைக்க உள்ளது. இதற்கான பணிகளை திமுக தொடங்கி விட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடிப்பதால் திமுகவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

திமுக
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்தெடுக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் திமுகவின் சட்டப்பேரவை கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அண்ணா அறிவாலயம்
இதனை தொடர்ந்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைக்க அழைக்க கோரி மு.க.ஸ்டாலின் உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக வரும் 7ம் தேதி பதவியேற்பார் என கூறப்படுகிறது. அன்றே அமைச்சர்கள் பதவியேற்பும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *