அரசு மருத்துவமனையில் படிக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் காத்திருக்கும் அவலம்

அரசு மருத்துவமனையில் படிக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் காத்திருக்கும் அவலம்
Spread the love

கொரோனோ தோற்று எண்ணிக்கை கைமீறி செல்வதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் மருத்துவமனை முதல்வர் முருகேசன் தகவல்.

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனோ வார்டில் படுக்கைகள் நிரம்பியதால் புதிதாக வரும் கொரோனோ நோயாளிகளுக்கு இடமில்லாமல் காத்திருக்கின்றனர்.

இதனால் ஆக்சிஜன் சிலிண்டரோடு நோயாளிகள் காத்திருக்கின்றனர். மேலும் நோயாளிகளை
108 ஆம்புலன்ஸில் வைத்து சிகைச்சை அளித்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் உள்ள 650 படுக்கைகளும் நிரம்பியதன் காரணமாக நோயாளிகள் காக்க வைக்கப்பட்டு, குணமடைந்து வெளியே செல்லும் படுக்கைகளுக்கு தகுந்தவாறு நோயாளிகளை அனுமதித்து வருவதாகவும், மேலும் கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட கொரோனோ சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் முழுமை அடையும் எனவும், கொரோனோ தோற்று எண்ணிக்கை கைமீறி செல்வதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் மருத்துவமனை முதல்வர் முருகேசன் தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *