16, 500 போலீசாருக்கு தடுப்பூசி

16, 500 போலீசாருக்கு  தடுப்பூசி
Spread the love

சென்னையில், காவல் துறையினர், இது வரை 16 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை உருவானதில் இருந்து தமிழக காவல் துறையில் கடந்த மார்ச் முதல் தேதியில் இருந்து இது வரை 1686 காவல்துறையினர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். 878 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 808 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

தமிழகத்தில் காவல் துறையினர் சுமார் 97 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தமிழக காவல் துறையில் இது வரை 54 பேர் பலியாகி உள்ளனர். 6 காவல்துறை அமைச்சு பணியாளர்கள் ஆவார்.

சென்னை காவல்துறையில் 16,500 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். கொரோனா இரண்டாவது அலையில், 665 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 513 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை காவல் துறையில் இது வரை 17 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர். முதல் அலையில் 10 பேர் பலியானார்கள், இரண்டாவது 2 அலையில் 7 பேர் இறந்து விட்டதாக, காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7 பேரில் 3 பேர் நெகட்டிவ் ஆகி பலியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *