ரெம்டெசிவர் விற்பனை – 2 பேர் கைது

ரெம்டெசிவர் விற்பனை – 2 பேர் கைது
Spread the love

கிண்டி பகுதியில், ரெம்டெசிவர் மருந்து விற்பனை டாக்டர், கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஊழியர் கைது.

சென்னை, கிண்டி  பகுதியில்,ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற,  டாக்டர் மற்றும் கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஊழியர் ஆகிய 2 பேரை கைது  கைது செய்தனர்.

சென்னை, கிண்டி பகுதியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றதாக, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது, சம்பவ இடத்தில் விரைந்து வந்த போலீசார்,அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அங்கு,மருந்தை விற்ற,  தனியார் மருத்துவமனை டாக்டர் ராமசுந்தர், கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஊழியர் கார்த்திக் ஆகியோரை  கைது செய்தனர்.இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் 2 பேரையும் கிண்டி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கிண்டி போலீசார் கைதான 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து, ரெம்டெசிவிர் மருந்தை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *