ஆண் சிசுவை கொன்று – பொதுக் கழிப்பறையில் வீசினர்

ஆண் சிசுவை கொன்று – பொதுக் கழிப்பறையில் வீசினர்
Spread the love

சென்னை, செங்குன்றம் பகுதியில், அதிகாலையில் ஆண் சிசுவை கொன்று பொதுக் கழிப்பறையில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, செங்குன்றம், நரிக்குறவர் குடியிருப்பு, கலைஞர் தெருவில், பொதுக் கழிப்பிடம் உள்ளது. இன்று, காலை அந்த கழிப்பறைக்கு காலை கடனை கழிக்க சிலர் வந்தனர். அப்போது, அங்கு, பிறந்து சில மணி நேரம் ஆன ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் இருந்தது. பீங்கான் குத்தப்பட்டு, அந்த ஆண் சிசு கொல்லப்பட்டிருந்தது. தகவல் கிடைத்து, செங்குன்றம் போலீசார் விரைந்து வந்து, ஆண் சிசுவை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக் காதலில் பிறந்த குழந்தையா, கொன்றது யார் என விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *