தீபிகா படுகோனுக்கு கொரோனா – தந்தை, தாய், சகோதரி அனைவருக்கும் தொற்று உறுதி

தீபிகா படுகோனுக்கு கொரோனா – தந்தை, தாய், சகோதரி அனைவருக்கும் தொற்று உறுதி
Spread the love

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வெகு வேகமாக பரவி வருகிறது. பொது மக்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் இறுதி வாரம் முதல் சராசரியாக 3.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீபிகா படுகோன் தற்போது பெங்களூருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீபிகாவின் தந்தை, தாய், சகோதரி அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *