மேற்கு வங்க வன்முறை; தமிழகத்தில் இன்று பா.ஜ., ஆர்ப்பாட்டம்!

மேற்கு வங்க வன்முறை; தமிழகத்தில் இன்று பா.ஜ., ஆர்ப்பாட்டம்!
Spread the love

சென்னை : மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வினர் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து,தமிழக பா.ஜ., சார்பில், இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழக பா.ஜ., தலைவர் முருகன், நேற்று விடுத்த அறிக்கை: மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., எழுச்சிமிக்க வெற்றியை பெற்றது. நந்திகிராம் தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம், முதல்வர் மம்தா பானர்ஜி தோற்றார்.
பா.ஜ.,வின் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு, எரிச்சல் அடைந்துள்ள மம்தா பானர்ஜி, அவருடைய கட்சி குண்டர்களை வைத்து வன்முறை வெறியாட்டத்தை துவக்கியிருக்கிறார். பா.ஜ., தொண்டர்கள், ஆறு பேர் பலியாகி உள்ளனர்.

இந்த வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாவட்ட, மண்டல நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் நாம் எழுப்புகிற குரல், நாடு முழுதும் எதிரொலிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *