லாரியில் தீ: சிதம்பரத்தில் பரபரப்பு !

லாரியில் தீ: சிதம்பரத்தில் பரபரப்பு !
Spread the love

சிதம்பரம் : சிதம்பரத்தில் லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து சேலம் மாவட்டம், சங்ககிரிக்கு பச்சை பயறு மூட்டைகளுடன் லாரி நேற்று இரவு 9:45 மணிக்கு புறப்பட்டது. லாரியை சிதம்பரத்தைச் சேர்ந்த கோபி ஓட்டினார்.சிதம்பரம் மேலவீதியில் 9:55 மணிக்கு வந்தபோது, லாரியின் பின்னால், திடீரென தீ பிடித்தது. உடன், சாலையில் இருந்தவர்கள் டிரைவரிடம் கூறி லாரியை நிறுத்தினர்.தகவலறிந்து வந்த சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் தீயணைப்புத் துறையினர் பழனிசாமி தலைமையில் தீயை அணைத்தனர். லாரி எரியத் துவங்கியதும் பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *