நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தினருக்குகொரோனா!!

நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தினருக்குகொரோனா!!
Spread the love

நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தில், அவரைத் தவிர அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உள்ளது. கடந்த சில தினங்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் உயர்ந்து காணப்படுகிறது. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்வால் நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

பல முன்னணி மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து, ஆக்சிஜன் விநியோகத்தை விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. கொரொனா பரவலைக் கட்டுப்படுத்த கர்நாடகா, டெல்லியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரவு ஊரடங்கும், கூடுதல் கடப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது மற்றும் இதர செயல் முறைகளைத் தமிழக அரசு முயற்சித்து வருகிறது

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஷில்பா ஷெட்டி, ’’கடந்த 10 நாட்கள் எங்கள் குடும்பத்தினருக்கு மிகவும் கடினமானதாக இருந்தன. அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதிகாரபூர்வ வழிமுறையின் படி அனைவரும் வீட்டுத் தனிமையில், அவரவர் அறையில் உள்ளனர். கடவுளின் அருளால், அனைவரும் தேறி வருகின்றனர். எனக்குத் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. தொடர்ந்து எங்களை உங்கள் பிரார்த்தனையில் வைத்திருங்கள்’’ என்று பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *