கொரோனா நிவாரணமாக 13 வகை மளிகை பொருட்கள் வழங்க – தமிழக அரசு திட்டம்!

கொரோனா நிவாரணமாக 13 வகை மளிகை பொருட்கள் வழங்க – தமிழக அரசு திட்டம்!
Spread the love

தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணமாக 13 வகை மளிகை பொருட்கள் வழங்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 2.11 கோடி குடும்ப அட்டைதாரகளுக்கு 13 வகையான மளிகை பொருட்கள் கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உள்ளிட்ட 13 வகையான மளிகை பொருட்கள் தமிழக அரசு சார்பில் ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்தநாள் அன்று கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே திமுக அரசு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. அதன்படி, முதல் தவணை ரூ.2,000 மே 15ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. அதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்களையும் தமிழக அரசு தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *