உலகின் சுற்றுலா தளத்தில் முதன்மையாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் ..!

உலகின் சுற்றுலா தளத்தில் முதன்மையாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் ..!
Spread the love

டெல்டா மாவட்டம் என்று பெயர் பெற்ற தஞ்சையில் அமைத்துள்ளது தஞ்சை பெருவுடையார் கோவில். இக்கோவில் தஞ்சை பெரிய கோவில் என்றும் அழைப்பார்கள் . இந்த கோவிலானது தஞ்சையை ஆண்ட இராசராச சோழ மன்னரால் கட்டப்பட்டது . முதலாம் இராசராச சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்கக் காலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் எனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டது.

தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு 5 பிப்ரவரி, 2020 ஆம் ஆண்டு காலை 9.30 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இராஜகோபுரம், அனைத்து விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கை தொடர்ந்து அனைத்து கும்பங்களுக்கும் மகாதீபாரதனை நடைபெற்றது. தமிழ், சமஸ்கிருதத்தில் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோவிலை பார்பதுக்காக வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரம் கணக்கானோர் வருகை தருகின்றனர் . அமெரிக்கா ,ஆஸ்திரேலியா , ஜெர்மனி , இத்தாலி , ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *