மனைவி இறந்ததால் கணவன் தற்கொலை-தம்பதிகளின் சோகம்!

மனைவி இறந்ததால் கணவன் தற்கொலை-தம்பதிகளின் சோகம்!
Spread the love

தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் அடுத்த சின்னமாடன் குடியிருப்பை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன்(28). பனை ஏறும் தொழிலாளியான இவருக்கும், நெல்லை மாவட்டம் ஆயன்குளத்தை சேர்ந்த நந்தினி(23)க்கும் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி அன்று திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்னர் இத்தம்பதி, சின்ன மாடன் குடியிருப்பிலேயே வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி அன்று நந்தினிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் முத்து கிருஷ்ணன். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார்.

நந்தினி இறந்த துக்கத்தில் யாரிடமும் பேசாமல், சரிவர சாப்பிடாமல் இருந்த முத்துகிருஷ்ணன், நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். வீட்டினர் வந்து பார்த்துவிட்டு, மயங்கி கிடந்த முத்துகிருஷ்ணனை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனக்கு தூக்கிச்சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் மாலை முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார்.

திருமணமாகி 2 மாதத்திலேயே புதுமணத்தம்பதிகளுக்கு நேர்ந்த சோகத்தினால் சின்னமாடன் குடியிருப்பு, ஆயன்குளம் மக்களும் துயரத்தில் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *