உயிரிழந்த எஜமானி.. சுடுகாட்டிலேயே ஏக்கத்துடன் காத்திருந்த நாய் செய்த செயலால் சோகம்.!

உயிரிழந்த எஜமானி.. சுடுகாட்டிலேயே ஏக்கத்துடன் காத்திருந்த நாய் செய்த செயலால் சோகம்.!
Spread the love

பீகார் மாநிலத்தில் ஒரு பெண்மணி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருக்கின்றார். இவர் மிகவும் ஆசையாக ஒரு நாயை வளர்த்து வந்துள்ளார். இறந்த பின்னர் அவரது உடல் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, அந்த நாயும் பின்தொடர்ந்தது. உடல் தகனம் செய்யப்பட்ட பின் அனைவரும் அங்கிருந்து கிளம்ப மிகவும் சோகமாக நாய் அங்கேயே படுத்து கிடந்தது.

மேலும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்துவிடும் என்று நினைத்து குடும்பத்தினர் வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால், நான்கு நாட்களாக நாய் வீட்டிற்கு வரவில்லை. எனவே, அதிர்ச்சி அடைந்த அவர்கள் சுடுகாட்டுக்கு சென்று பார்த்தபோது உணவு எதுவும் சாப்பிடாமல் எஜமானி தகனம் செய்யப்பட்ட இடத்தில் சோகத்துடன் நாய் அமர்ந்திருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் அவர்கள் நாயை வீட்டிற்கு கொண்டு செல்ல முயற்சிக்க நாய் அவர்களைப் பார்த்து குரைத்தது. பின்னர், சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து உணவு கொடுத்து அடைத்து வைத்தனர். ஆனால், அடுத்த ஒரு சில நாட்களில் அங்கிருந்து தப்பியோடி இருக்கிறது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மனிதர்களை விட நாய் நன்றி பிராணி என்பதை அவ்வப்போது உணர்த்திக் கொண்டே இருக்கிறது உலகம்.

இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர், அந்த நாய் தெருவில் சுற்றி வந்ததாகவும், அப்போது ஆதரவற்ற அந்த நாய்க்கு இறந்த பெண் உணவளித்தார் என்றும், எனவே ஆதரவற்று இருந்த தன்னை அரவணைத்ததால், அந்த நாய் அவரிடம் மிகவும் அன்புடன் விசுவாசத்துடன் இருந்தது என்றும், பெண் இறந்து விட்டதால் இனி அன்பு செலுத்த யார் இருக்கிறார்கள் என்ற ஏக்கத்தில் நான் எங்கேயோ ஓடி விட்டது.” என்றும் கவலையுடன் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *