நடிகர் சோனுசூட்டுக்கு சிலை வைத்து கோயில்…

நடிகர் சோனுசூட்டுக்கு சிலை வைத்து கோயில்…
Spread the love

நடிகர் சோனுசூட்டுக்கு, பொதுமக்கள் சிலை அமைத்து கோயில் கட்டியுள்ளனர். இச்சம்பவம், திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் நடுத்தர குடும்பத்தினர் பலர் ஒரு வேலை உணவு கிடைக்காமல் கடும் சிரமம் அடைந்தனர். அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். இதையொட்டி, பாலிவுட் நடிகர் சோனு சூட், 28 மாநிலங்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தார். அவர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி செய்வதற்காக தனது 10 கோடி சொத்தை அடமானம் வைத்தார்.

இந்நிலையில், கொரோனா காலத்தில் உதவிய சோனுசூட்டின் மனிதநேயத்தை பாராட்டி, தெலங்கானா மாநிலம் சித்திப்பெட் மாவட்டத்தில் துப்பதண்டா என்ற கிராம மக்கள், மாவட்ட அதிகாரிகளின் உதவியுடன் சோனு சூட்டுக்கு சிலை வைத்து கோயில் கட்டியுள்ளனர். இக்கோயிலை திறந்ததும், கிராம பெண்கள் சிலை முன்பு நடனமாடி, ஆரத்தி எடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

பிறமாநிலங்களில் போக்குவரத்து வசதி இல்லாமல், சிரமம் அடைந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல சோனுசூட் உதவினார். மேலும், வேலைவாய்ப்பு தளத்தையும் அமைத்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *