தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி – மத்திய அரசு அனுமதி

தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி – மத்திய அரசு அனுமதி

நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு அமெரிக்கா சிகிச்சை செல்வதற்காக தனி விமானத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அண்ணாத்த’ படத்தின் பணிகளை முடித்து கொடுத்துவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக முன்னரே தகவல்கள் வெளியாகின. தற்பொழுது கொரோனோ ஊரடங்கு மற்றும் சர்வேதேச விமான போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் இருப்பதால் தனி விமானம் மூலம் தன் குடும்பத்தாருடன் அமெரிக்கா செல்ல மத்திய அரசிடம் ரஜினிகாந்த் அனுமதி கோரியிருந்தார்.

இந்த தனி விமானத்தில், 14 பேர் பயணம் செய்யலாம். தான் மட்டுமல்லாமல், குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். இந்த தனி சிறப்பு விமானத்திற்கு, மத்திய அரசு அனுமதி தற்பொழுது அனுமதி வழங்கியுள்ளது.