கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க.. வைகோ வலியுறுத்தல்

கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க.. வைகோ வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையையே இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. விலைவாசியும் அதற்கு ஏற்றவாறு உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது.

அதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் விலை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாய் ஆகவும், எம்- சான்ட் மணல் ஒரு யூனிட் 3,600- லிருந்து ரூ.4000, முக்கால் அங்குல ஜல்லி ஒரு யூனிட் 2500 ரூபாயில் இருந்து 2, 800 ஆகவும், ஒன்றரை அங்குல ஜல்லி ஒரு யூனிட் 2450 ரூபாயில் இருந்து 2, 600 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை இந்திய ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கட்டுமான பணிகளை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் அதிர்ச்சி அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.