புதுமாப்பிள்ளை உயிரோடு எரிப்பு – கள்ளக்காதலி கைது

புதுமாப்பிள்ளை உயிரோடு எரிப்பு – கள்ளக்காதலி கைது

புதுக்கோட்டையில், வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய இருந்த புதுமாப்பிள்ளையை உயிரோடு எரித்து கொல்ல முயற்சித்த வழக்கில், கள்ளக்காதலி சிறையில் அடைக்கப்பட்டார்.

  புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி, கரையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(25). இவர், சொந்தமாக லாரி வைத்து தொழில் நடத்தி வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரின் மனைவி ராதா(33). இவர்களுக்கு, 19 வயதில் மகளும், 16 வயதில் மகனும் உள்ளனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ஜெயக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். ராதாவுக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டன. சதீஷ்குமாருக்கு, நேற்று வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், ராதா அதற்கு சம்மதிக்க வில்லை. ஆத்திரத்தில் இருந்த ராதா, சதீஷ்குமார் மீது மண்ணெண்ணய் ஊற்றி எரித்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில், சதீஷ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில், ராதாவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.