கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு

கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு

சென்னை, திருவொற்றியூர் பகுதியில், கிணற்றில் தவறி விழுந்த , பசுமாட்டை போராடி, உயிரோடு மீட்டனர்.

  சென்னை, திருவொற்றியூர், வடக்கு, தெற்கு ரயில்வே சாலையில், கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்று அருகே பசுமாடு ஒன்று மேய்ந்துக்கொண்டிருந்தது. அது, தவறி, திடீரென, கிணற்றில் விழுந்தது, உயிருக்குப்போராடியபடி, பசுமாடு கத்தியது. அங்கிருந்த பொது மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு, தீயணைப்பு துறை, திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்தனர். கயிறு கட்டி, அதன் மூலம், போராடி பசுமாட்டை உயிரோடு மீட்டனர்.