காரில் கடத்தப்பட்ட மண்ணுளிப்பாம்புகள் – மூவர் கைது

காரில் கடத்தப்பட்ட மண்ணுளிப்பாம்புகள் – மூவர் கைது

ராசிபுரம் அடுத்த கீரனூர் சோதனைச்சாவடியில் காரில் கடத்தப்பட்ட இரண்டு மண்ணுளியன் பாம்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கீரனூர் சோதனை சாவடியில் சேலத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்த காரை சோதனை மேற்கொண்டனர். காரில் மண்ணுளியன் பாம்பு மறைத்து கொண்டு செல்லப்பட இருந்தது தெரியவந்தது. அதனை அடுத்து காவல்துறையினர் மண்ணுளியன் பாம்பை பறிமுதல் செய்தனர் மேலும் காரில் வந்த வில்பிரண்ட், வேல்முருகன், ஆல்பின் உள்ளிட்ட 3 பேரை பிடித்து ராசிபுரம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் . 3 பேரையும் மாவட்ட வனஅலுவலர் ராஜாங்கம் ராசிபுரம் வனஅலுவலர் ரவிசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மண்ணுளிப்பாம்புபை வீட்டில் வளர்த்தால் வாஸ்து சாத்திரப்படி ராசி என்றும், இந்த பாம்பு இருக்கும் வீட்டில் மகாலட்சுமி கடாக்சம் பெருகும் என்றும் அதற்காக தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் விலைகொடுத்து வாங்குவதால் இன்றளவில் இந்த மண்ணூழி பாம்பை கடத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.