அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை : தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி. கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, குமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், ஈரோடு, சேலம், திருச்சி, தி.மலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.