ஒரே வாரத்தில் 47% உயர்ந்த பாதிப்பு – ரஷியாவில் தலைதூக்கும் கொரோனா

ஒரே வாரத்தில் 47% உயர்ந்த பாதிப்பு – ரஷியாவில் தலைதூக்கும் கொரோனா

ரஷியாவில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை, கடந்த ஒரு வாரத்தில் 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு கொரோனா தடுப்புக் குழு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் கொரோனா தடுப்புக் குழு தெரிவித்துள்ளதாவது:

கடந்த 12ம் தேதி மட்டும் 13,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 6ம் தேதி பதிவு செய்யப்பட்ட 9,163 பாதிப்பைவிட மிகவும் அதிகமாகும். புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் மாஸ்கோவைச் சேர்ந்தவர்கள். அந்த நகரில் கடந்த 12ம் தேதி மட்டும் 6,701 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு வாரத்துக்கு முன் அங்கு தினசரி தொற்று 2,936 ஆக மட்டுமே இருந்தது.

மாஸ்கோவில் கோவிட் பரவல் வேகமெடுத்து வருவதைத் தொடர்ந்து, அங்கு பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசமும் கையுறையும் அணிந்து வர வேண்டிய விதிமுறையை அதிகாரிகள் கடுமையாக செயல்படுத்தத் தொடங்கி உள்ளனர். மேலும் அங்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாஸ்கோவில் தடுப்பூசித் திட்டத்தையும் தீவிரப்படுத்த உள்ளோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.