எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையன்.. அமீர் அர்ஷின் 3 வங்கி கணக்குகள் முடக்கம்..

சென்னையில் எஸ்பிஐ ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அமீர் அர்ஷின் 3 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்களை குறிவைத்து நூதன முறையில் பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏடிஎம் இயந்திரங்களின் தொழில் நுட்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரியானா மாநிலத்தை சேர்ந்த 10 கொள்ளையர்கள் நூதன திருட்டில் ஈடுபட்டதை போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபர் அமீர் அர்ஸ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் ஹரியானா சென்ற தனிப்படை போலீசார் வீரேந்தர் என்ற நபரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் கொள்ளையன் அமீர் அர்ஷின் 3 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த வங்கிக் கணக்குகளை பயன்படுத்தித்தான் எஸ்.பி.ஐ. ஏடிஎம்.மில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளான். எஸ்.பி.ஐ. ஏடிஎம் வங்கி கணக்குகளை முடக்கி எங்கெங்கு பணம் பரிவர்த்தனை நடந்துள்ளது என போலீஸ் ஆய்வு செய்து வருகின்றனர்.