புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்த பிரபல இயக்குனர்… அதிர்ச்சியில் திரையுலகம்

சென்னையில் பிரபல திரைப்பட கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.

இயக்குனர்கள் கே.ஆர், ஆர்.கே. செல்வமணி, மனோஜ்குமார் உட்பட பல இயக்குனர்களின் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் கலை இயக்குநர் அங்கமுத்து சண்முகம். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

கலை இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளராகவும் தொடர்ந்து 3 முறை தேர்வாகி அங்கமுத்து சண்முகம் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், புற்றுநோயின் பாதிப்பில் இருந்த கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம்  இன்று (27.06.2021) காலமானார். அவரது உடல் குமரப்ப முதலி தெரு நூங்கம்பக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (28.06.2021) அவரது உடல் 12 மணியளவில நல்லடக்கம் செய்யப்படும்.